தங்க தரம் என்றால் என்ன 2025

தங்க தரம் என்றால் என்ன - தங்க மதிப்பீட்டு அளவு என்பது துல்லியமாக தங்கத்தில் உள்ள உலோகங்கள் அல்லது மற்றது பிரித்தெடுத்து கூறும் அளவாகும். தங்கங்களை நாம் எப்போதும் வாங்க போவதில்லை. பணம் இருக்கும்போது வருடத்திற்கு நான்கு, ஐந்து முறை தங்கம் வாங்க நாம் முற்படுவோம். இதில் ஒரு சிலர் அதிகமாக வாங்குகின்றனர். இதில் நாம் குறிப்பாக தரம் பார்த்து வாங்குதல் மிகவும் அவசியம். தங்கங்கள் பூமியில் வெட்டி எடுக்கும்போது எந்த வித கலப்படமும் இல்லாமல் வெட்டி எடுக்கப்படுகிறது. ஆனால் அதனை விற்கும்போது கலப்படம் இல்லாமல் இருப்பதில்லை. இது சில பேருக்கு தெரிவதில்லை. தங்கங்கள் 08, 09, 10, 12, 14, 18, 22 மற்றும் 24 கேரட் என தரத்திற்கு ஏற்றவாறு பிரிக்கப்படுகிறது.

தங்க தரம் என்றால் என்ன


Kdm என்றால் என்ன

இதில் ஏழாம் நிலையான 22 கேரட் வகைகளை அதிகமாக வாங்குவார்கள். ஏனெனில் இதனை நமக்கு ஏற்றவாறு டிசைன் செய்து தருவார்கள். அது மட்டுமில்லாமல் இதனை காயின் மூலம் நாம் வாங்கினால் விற்கும்போது நமக்கு லாபமே. இதன் தரம் 91.67 சதவீதம் மட்டுமே. அதாவது 92 என வைத்து கொண்டால் மீதம் உள்ள எட்டு சதவீதம் உலோகங்களை சேர்ந்தது. இதனை 916 அல்லது Kdm என்றும் சொல்லலாம். இதில் 92 சதவீதம் தங்கம் மற்றும் 8 சதவீதம் காட்மியம் போன்ற உலோகத்தால் செய்யப்பட்டது. தற்போது காட்மியத்திற்கு பதில் துத்தநாகத்தை உபயோகித்து வருகின்றனர்.

தங்கம் விலை எப்போது குறையும்

24 கேரட் தங்கம் என்றால் என்ன

சுத்தமான 100 சதவீதம் கொண்டதை 24 கேரட் எனலாம். ஆனால் இதனை கொண்டு எந்த வித ஆபரணங்களை செய்ய முடியாததால் மக்கள் 22 கேரட் நகைக்கு செல்கின்றனர். 

களஞ்சி மற்றும் மோதிரத்தின் அளவு

1 களஞ்சி தங்கம் எத்தனை கிராம் என்றால் 1.77 கிராம் எடை ஆகும். ஒரு பவுன் தங்க மோதிரம் செய்ய தேவைப்படும் தங்கத்தின் அளவு எவ்வளவு என்றால் நாம் செய்யும் அல்லது மோதிரத்தை பொறுத்ததே. எடுத்துக்காட்டாக கால் பவுனிலே மோதிரங்கள் வருகிறது.

தங்கம் வாங்க நல்ல நாள் 2025