தங்கம் விலை எப்போது குறையும் 2025 ஜனவரி - தங்கம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. ஆனால் தங்கம் விலை அன்றும் சரி இன்றும் சரி உயர்ந்து கொண்டே தான் போகிறது. அது மட்டுமில்லாமல் அதற்குண்டான வரியும் ஏறிக்கொண்டே போகிறது. இதனால் சாமானிய மக்கள் தங்கம் வாங்குவது என்பது சற்று கடினமாக அவர்களுக்கு அமைகிறது. இருந்தாலும் கல்யாணம், காது குத்து மற்றும் பல நிகழ்ச்சிகளுக்கு பெரும்பாலும் தங்கங்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இருந்தபோதிலும் நாளுக்கு நாள் கோல்ட் ரேட் கூடிக்கொண்டே செல்கிறது.
1925 இல் தங்கமானது ஒரு கிராம் ரூபாய் 1.88 காசுக்கும் 10 கிராம் 18.75 காசுக்கும் விற்பனை ஆனது. இங்கே 2000 வருடத்தில் இருந்து 2022 ஜூலை வரையும் என்னென்ன விலை மாற்றங்கள் இருப்பதை துல்லியமாக காணலாம்.
அப்டேட் மே 06, 2023
தங்கம் விலையில் நேற்றுக்கும் இன்றுக்கும் 100 முதல் 200 வரையும் ஒரு கிராமிற்கு வித்தியாசம் உள்ளது. இது படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம் விலை இன்று மதுரை
வருடம் விலை ( 1 கிராம் )
2000 440
2001 430
2002 499
2003 560
2004 585
2005 700
2006 857
2007 1080
2008 1250
2009 1450
2010 1850
2011 2640
2012 3105
2013 2960
2014 2800
2015 2634
2016 2862
2017 2966
2018 3143
2019 3929
2020 5110
2021 4873
2022 5133
2023 5721 ( மே 06, 2023 )
2024 7045 ( நவம்பர் 13, 2024 )
குறிப்பு
மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் 22 கேரட் தங்க விலைகள் ஆகும். 24 கேரட் தங்க விலைகள் இல்லை. பெரும்பாலும் 24 கேரட் தங்கத்தின் விலைகள் இதனை விட கூடுதலாகவும் மற்றும் அதனை நாம் நமக்கு ஏற்றவாறு டிசைன் செய்ய முடியாத காரணத்தால் அதனை விலை பட்டியலில் சேர்க்கவில்லை. இந்த விலை படிகள் ஒவ்வொரு ஊர்களுக்கும் வேறுபடும். அதில் தங்கத்தின் சுத்த தன்மை மற்றும் உலோகங்கள் சேர்க்கும் விதமே விலைகளை தீர்மானிக்கும். மேற்படி சேதாரம், செய்கூலி போன்ற விஷயங்கள் இருப்பதால் ஒரே விலை எங்கும் இருக்காது.