தனி பட்டா என்றால் என்ன

தனி பட்டா வாங்குவது எப்படி - தனி பட்டா என்பது தனிப்பட்ட ஒருவருடைய பெயரில் மட்டும் இருக்கும் நிலம் ஆகும். பொதுவாகவே கூட்டு பட்டாவில் இருந்து தான் தனி பட்டாவாக மாற்றுகிறார்கள். ஏனென்றால் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் ஒரே நிலத்தின் பெயரில் இருப்பார்கள். ஆனால் அதில் அவர்களுக்கு உனக்கு இந்த நிலம் எனக்கு இந்த நிலம் என்று குறிப்பிட்டு இருக்க மாட்டார்கள்.

தனி பட்டா என்றால் என்ன


கேள்வி 1

நான் சொந்தமாக ஒரு நிலம் வாங்க உள்ளேன். எனக்கு அந்த நிலம் தனி பட்டாவாக மாறுமா அல்லது கூட்டு பட்டாவாக மாறுமா ?

நீங்கள் ஒரு நிலம் தனியாக வாங்கு உள்ளீர்கள் என்றால் நிச்சயமாக அந்த நிலம் தனி பட்டா தான் . அதில் எந்த வித சந்தேகமுமில்லை.

கேள்வி 2

இரண்டு பேரும் சேர்ந்து ஒரு நிலம் வாங்க உள்ளோம். பின்னாளில் தனியாக நிலத்தை மாற்ற முடியுமா ?

கண்டிப்பாக முடியும். உதாரணமாக 30 சென்ட் நிலம் உள்ளது என்றால் அதில் 15 சென்ட் நிலம் உங்களை சாரும். அந்த 15 சென்ட் இடத்தை சர்வேயர் கொண்டு நிலம் அளக்க வேண்டும். மேலும் அதற்கு முன்னர் ஒரே சர்வே நம்பர் மட்டும் தான் இருக்கும். இப்பொழுது அந்த சர்வே நம்பரில் இருந்து ஒரு உட்பிரிவு எண் உங்களுக்காக வழங்கப்படும்.

எடுத்துக்காட்டாக அந்த நிலம் 24 சர்வே எண் கொண்டதாக இருக்கும். அதனை தனி பட்டா நிலமாக மாற்றும்போது 24A என்று உட்பிரிவு செய்வார்கள்.

கேள்வி 3

தனி பட்டா சர்வே எண் மற்றும் உட்பிரிவு எண் வாங்கியவுடன் பட்டா பெயர் மாற்ற வேண்டுமா ?

கண்டிப்பாக தனி பட்டாவாக மாற்றும்போது அந்த பட்டா பெயர் உங்கள் பெயருக்கு மாற்ற வேண்டும். வெறும் பத்திரத்தில் மட்டும் உங்கள் பெயர் மட்டும் மாற்றினால் போதாது. மாறாக பத்திரம் மாற்றும்போது பட்டா பெயரும் அப்போதே மாற்றி ஆக வேண்டும்.

பட்டா என்றால் என்ன

சிட்டா என்றால் என்ன

Eservices