தனிநபர் ரேஷன் கார்டு பெறுவது எப்படி

தனிநபர் ரேஷன் கார்டு பெறுவது எப்படி - ஒரு நபருக்கான அட்டையை தமிழக அரசு வழங்கி வருகிறது. எந்த ஒரு நபரும் வறுமை கோட்டிற்கு கீழ் இருந்தால் அவர்கள் நியாய விலை கடைகளில் மூலம் பொருட்களை வாங்கி கொள்ள முடியும். எதனால் தனி நபர் கார்டு பெறுகிறார்கள் என்று பார்த்தால் ஒரு குடும்பத்தில் இரண்டு அல்லது மூன்று நபர்கள் இருக்கிறார்கள் என்றால் அந்த இரண்டு பேரும் கல்யாணம் செய்து வேறு ஒரு ஸ்மார்ட் அட்டையில் சேர்க்கப்பட்டால் ஒரு நபர் மட்டுமே அந்த அட்டையில் இருப்பார். இதுவும் தனிநபர் அட்டை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அது மட்டுமா பிறந்ததில் இருந்து அட்டையில் சேர்க்கப்படாமல் இருந்தாலும் அது தனிப்பட்ட நபர் அட்டையாகவே கருதப்படுகிறது.

தனிநபர் ரேஷன் கார்டு பெறுவது எப்படி


ஒரு நபர் குடும்ப அட்டை பெறுவது எப்படி

மற்ற அட்டையை போலவே இந்த அட்டையும் அப்ளை செய்யலாம். ஸ்மார்ட் கார்டும் பெற்று கொள்ள முடியும். ஏற்கனவே அட்டையில் இருந்து தனி நபராக இருந்தால் அட்டை பிறழ்வுகள் பயன்படுத்தி டூப்ளிகேட் கார்டு வாங்கி கொள்ளலாம். புதிதாக அட்டையை விண்ணப்பிப்பவர்கள் சீனியர் சிட்டிசன் ஆக இருந்தால் முன்னுரிமை வழங்க படும். 

Tnpds வெப் போர்டல் சென்றும் விண்ணப்பிக்கலாம் அல்லது இ சேவை மையம் சென்றும் விண்ணப்பிக்கலாம். பொது மையத்திற்கு சென்று விண்ணப்பித்தால் ஒரு மாதங்களுக்குள் வந்து விடும். ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் தனி நபர் ரேஷன் அட்டை பெறுவது என்பது இயலாத நிலை. ஏனென்றால் அரசு தரப்பில் குடும்ப அட்டைக்கு 1000 ரூபாய் திட்டம் என அறிவித்து இருந்தது. அதனால் ஒரே வீட்டில் உள்ள மக்கள் தனி தனியாக அட்டைகளை எடுக்க பொது சேவை மையத்திற்கு தேடி செல்கின்றனர்.

சரியான காரணம் ஆவணங்கள் இருந்தால் மட்டுமே தனியாக ரேஷன் அட்டை பெற முடியும். மேலும் இப்போது ஐந்து கிலோ அரசி வரையும் அவர்கள் பெற்று கொண்டு வருகின்றனர்.

ரேஷன் கார்டு விண்ணப்பத்தின் நிலை

ஸ்மார்ட் ரேஷன் கார்டு ஸ்டேட்டஸ் தமிழ்நாடு