தற்காலிக மின் இணைப்பு கட்டணம்

தற்காலிக மின் இணைப்பு கட்டணம் ( Tneb temporary connection charges for house construction ) - முதலில் தற்காலிக மின் இணைப்பு என்றால் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். தற்காலிகம் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பெறப்படும் மின் இணைப்பு ஆகும். இதில் அதிகமாக வீடு அல்லது வணிக கட்டடங்கள் கட்டுவோர் பெருமளவில் தற்காலிகமாக வாங்குகின்றனர்.

தற்காலிக மின் இணைப்பு கட்டணம்


புதிதாக கட்டடம் கட்டும்போது மின்சாரம் என்பது தேவைப்படும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் நாம் வாங்கி கொள்ளலாம். அந்த வசதி மின்சார வாரியம் மக்களுக்கு ஏற்படுத்தி தந்துள்ளது.

இதையும் பார்க்க: மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வது எப்படி

தற்காலிகமாக மின்சாரம் பெற அப்படி என்னென்ன ஆவணங்கள், எவ்வளவு கட்டணங்கள் மற்றும் எத்தனை நாட்கள் ஆகும் போன்ற தகவல்களை கீழே காணலாம்.

1. சமீபத்திய சொத்து வரி ரசீது

2. கணினி பட்டா

3. நான்கு எல்லை சான்று

4. மூல பத்திரம்

5. கூட்டு பட்டாவாக இருந்தால் மற்ற பட்டாதாரர்களிடம் இருந்து Noc சான்று

6. 80 ரூபாய் பத்திரம்.

மேற்கண்ட ஆவணங்களின் நகல்கள் Tneblted இணையத்தளத்தில் அப்டேட் செய்தாலே உங்களுடைய வேலை 90 சதவீதம் முடிந்து விட்டது என்றே சொல்லலாம்.

தற்காலிக கட்டட மின் இணைப்பு கட்டண விவரம்

முன்பு 2818 ஆக இருந்த தற்காலிக மின் கட்டணம் தற்போது 5050 ரூபாயாக உயர்ந்துள்ளது. கட்டணம் கட்டிய 10 நாட்களுக்குள் உங்களுக்கு மின்சார வசதி வந்து விடும். கிலோ வாட்ஸ், 3 பேஸ் போன்றவை வேறுபட்டால் கட்டணங்களும் வேறுபடும்.

இதையும் பார்க்க: வீட்டு மின் கட்டண விவரம்