திருமணம் செய்ய உகந்த மாதங்கள் 2025

திருமணம் செய்ய உகந்த மாதங்கள் 2025 - திருமணம் என்பது இரண்டு பேரும் சந்தோசமாக கடைசி வரையும் வாழக்கூடிய ஒரு புனிதமான வாழ்க்கை முறையாகும். நமது முன்னோர்கள் அப்போதே திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்றனர். அவர்களின் கூற்று இன்றைக்கு  சரியாக இருக்கிறது என்பதே உண்மை.

திருமணம் செய்ய உகந்த மாதங்கள் 2025


உகந்த மாதம் என்று இருந்தாலும் அதில் உகந்த நாளினை நாம் பார்ப்பது கட்டாயமே. மேலும் நல்ல நாள் பார்ப்பது ஒருபக்கம் இருந்தாலும் அதில் நல்ல நேரம் அவசியமே. ஏனெனில் முன் பத்தியில் குறிப்பிட்டுள்ளவாறு திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்பதால் அதனை சீரும் சிறப்புமிக்கதாக இருக்க வேண்டும் என்பதற்காக சரியான முகூர்த்தங்களை தேர்வு செய்தல் திருமணம் செய்வோருக்கு பலனளிக்கும்.

இதையும் படிக்க: கணபதி ஹோமம் செய்ய உகந்த நாட்கள்

தற்போதைய சூழ்நிலையில் அனைவரும் தேர்வு செய்யும் நாளாக ஞாயிற்றுக்கிழமை உள்ளதை யாரும் மறுக்க முடியாது. ஏனெனில் அன்றைய தினம் தான் அனைவருக்குமே விடுமுறை என்பதால் கல்யாணத்திற்கு அனைவருமே வருவார்கள் என்று நினைத்து கொண்டே இந்த நாளில் கல்யாணம் செய்கிறார்கள். அப்படி நாளினை நாம் தேர்வு செய்தல் மிகப்பெரிய தவறு என்று சொல்ல வேண்டும்.

இதையும் படிக்கலாமே: தாலி கயிறு மாற்ற ஏற்ற நாள்

திருமணம் செய்ய உகந்த கிழமை

1. திங்கள்

2. புதன்

3. வியாழன்

4. வெள்ளி

5. ஞாயிறு

குறிப்பு

இதில் புதன், வியாழன்  மற்றும் வெள்ளி நாட்கள் மிகச்சிறந்ததாக கருதப்படுகின்றது.

திருமணம் செய்ய வேண்டிய மாதங்கள் 2025

1. சித்திரை

2. வைகாசி

3. ஆனி

4. ஆவணி

5. கார்த்திகை

6. தை

7. மாசி

8. பங்குனி

குறிப்பு

மேற்கண்ட தமிழ் மாதங்களின் தேதிகள் ஆங்கில மாதங்களில் உள்ள தேதிகளின் இடையில் வருவதால் நீங்கள் தமிழ் மாதங்களை தேர்வு செய்தல் நல்லது.

இதையும் படிக்கலாமே: காதணி விழா செய்ய உகந்த நாள்