திருப்பதி நடைபாதை திறக்கும் நேரம் 2025 ( tirupati walking path timings 2025 ) - ஆந்திர மாநிலத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு திருப்பதி பெருமாளை காண உலகெங்கும் கோடான கோடி பக்தர்கள் செல்கின்றனர். மக்கள் தாம் வேண்டியது நிறைவேற வேண்டும் என்று இங்கு வருகின்றனர். அதனால் அவரை பார்க்க பாதை யாத்திரை மூலம் நடந்து அவர்களது வேண்டுதல்களையும் மற்றும் முடி காணிக்கைகளையும் கொடுக்கிறார்கள்.
மொத்தமாக நடைபாதை இரண்டு உள்ளது. இதில் பெரும்பாலும் அலிப்பிரி பாதையில் தான் மக்கள் அதிகம் செல்கின்றனர். இன்னொரு பாதையான ஸ்ரீவாரி பாதை நிறைய பேருக்கு தெரியாமல் இருக்கிறது. இவ்விரண்டிலும் நாம் திருப்பதி சாமியை தரிசிக்க பாதை யாத்திரை போகலாம்.
இதையும் படிக்கலாமே: தாலி கட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்
அலிப்பிரி நடைபாதை
இந்த பாதையில் மொத்தம் 3550 படிக்கட்டுகள் அமைந்திருக்கும். நான்கு கோபுரங்கள் மற்றும் மகாவிஷ்ணு அவதாரங்கள் மற்றும் நிறைய நிறைய தெய்வங்கள் என போகும் வழியில் இருக்கும். ஏழு மலையை தாண்டி தான் சாமியை தரிசிக்க முடியும். இதன் பாதை தூரம் மொத்தம் 09 கிலோ மீட்டர் ஆகும். இதனை கடக்க ஐந்திலிருந்து ஆறு மணி நேரம் ஆகலாம். தற்போது இதன் நேரம் என்று பார்த்தால் காலை நான்கு மணி முதல் இரவு பத்து மணி வரையும் மட்டுமே. முன்னர் எல்லாம் 24 மணி நேரமும் இந்த அலிப்பிரி நடைபாதைகள் திறந்து கொண்டே இருக்கும்.
இதையும் தெரிஞ்சிக்கோங்க: வீட்டில் எத்தனை விளக்கு ஏற்றினால் நல்லது
திருப்பதி ஸ்ரீவாரி மெட்டு
இந்த பாதையை பெரும்பாலும் மக்கள் பயன்படுத்துவது கிடையாது. ஏனெனில் பல பேருக்கு இந்த பாதை இருக்கிறதா என்பது கூட தெரியாமல் இருக்கும். இந்த பாதையிலும் நாம் அருள்மிகு திருப்பதியை தரிசிக்க செல்லலாம். இதன் தூரம் 2.1 கிலோ மீட்டர் மட்டுமே. ஒரு மணி நேரத்தில் கடந்து விடலாம். இங்குள்ள மொத்த படிக்கட்டுகளின் எண்ணிக்கை 2388 ஆகும். இதன் நடைபாதை நேரம் காலை 06 மணி முதல் மாலை 04.30 மணி வரையும் மட்டுமே.
இதையும் படிக்கலாமே: திருவண்ணாமலை கிரிவலம் நேரம்