தொலைந்த பத்திரம் பெறுவது எப்படி ( பத்திரம் தொலைந்து விட்டால் ) - தொலைந்த பத்திரத்தை மறுபடியும் ஆன்லைனில் நம்மால் எளிதாக எடுக்க முடியும். இந்த ஆன்லைனில் எடுக்கும் பத்திரம் ஒரிஜினல் கிடையாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அப்படி தொலைந்த விட்ட பத்திரம் நகல் இருந்தால் நம்மால் புதிதாக சார் பதிவாளர் அலுவலகத்தில் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
கேள்வி 1
என்னிடம் பட்டா எண் தெரியும். சர்வே நம்பர் தெரியாது. எனக்கு ஆன்லைனில் பட்டா எடுக்க தெரியாது. நான் எப்படி பத்திரத்தின் நகல் எடுக்க முடியும்.
பட்டா நம்பர் இருந்தால் ஆன்லைனில் எளிதாக பட்டா நகல் எடுத்து கொள்ளலாம். அப்படி பட்டா எடுக்கும்போது அதில் பட்டா நம்பர் மற்றும் சர்வே, உட்பிரிவு எண்கள் இருக்கும். அந்த எண்களை வைத்து வில்லங்கம் போட்டு பார்க்க வேண்டும். அப்படி வில்லங்க சான்றிதழின் நகலில் ஆவண எண் முதலில் தோன்றும். அந்த ஆவண எண்களை வைத்து தான் பத்திரத்தின் நகல் எடுக்க முடியும். அதற்கான வழிகளை கீழே காண்போம்.
ஸ்டேப் 1
பயனாளர் லாகின் செய்து கொள்ளுங்கள் i.e. Tnreginet. ஒரு சில நேரத்தில் லாகின் செய்யும்போது சரியான குறியீடை என்டர் செய்தால் கூட லாகின் செய்ய முடியாது. அதனால் மூன்று அல்லது நான்கு முறை லாகின் செய்ய முயற்சி செய்து பாருங்கள்.
ஸ்டேப் 2
உள்ளே லாகின் செய்தவுடன் மின்னணு சேவைகளில் சான்றளிக்கப்பட்ட நகலில் தேடல் மற்றும் சான்றளிக்கப்பட்ட நகல் விண்ணப்பிக்க என்பதை கொடுக்கவும்.
ஸ்டேப் 3
மூன்றாவது ஸ்டேப் ஆக ஆவண விவரம் தேடுதலில் உங்கள் ஆவண எண், சார்பதிவாளர் அலுவலகம், எந்த ஆண்டு ரெஜிஸ்டர் செய்தது போன்ற விவரங்கள் அடங்கி இருக்கும்.
ஸ்டேப் 4
நீங்கள் சரியாக ஆவண விவரங்களை கொடுத்தால் கீழே இணையவழி விண்ணப்பிக்க என்கிற option இருக்கும்.
ஸ்டேப் 5
இது எல்லாம் முடித்த பின்னர் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் கட்டண விபரங்கள் அனைத்தும் கொடுத்தால் உங்கள் பத்திரம் வந்து விடும்.