Tneb மீட்டர் போர்டு மாற்றும் கட்டணங்கள்

Tneb மீட்டர் போர்டு மாற்றும் கட்டணங்கள் - வீடு, இண்டஸ்ட்ரியல், வணிக கடைகளுக்கு பொருத்தப்படும் போர்டுகள் மின்சார அலுவலக பணியாளர்கள் மட்டுமே இடமாற்றம் செய்ய வேண்டும். மிக மிக அருகில் மாற்றினாலும் அல்லது இருந்தாலும் கட்டாயம் Tneb பணியாளர்கள் தான் தேவை. சமீப காலமாக மின்சார கட்டணம், சேவை கட்டணம் போன்றவை எல்லாம் அதிகரித்து உள்ளது. மேலும் இதன் கட்டணங்கள் கூடுதலாக அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Tneb மீட்டர் போர்டு மாற்றும் கட்டணங்கள்


1ஏ என்றால் 1000 ரூபாய் ஆகவும், 3ஏ என்றால் 1300 ரூபாய் ஆகவும் உள்ளது. இதனை செய்ய மின்பொறியாளரிடம் மனுவாகவும் கடிதமாகவும் கொடுக்கலாம். மேலும் wire சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் இதே கடிதங்களை நாம் தரலாம். ஒரு சில நேரத்தில் ஒரே நாளிலியே இதன் Process முடிந்து விடும். அதிகபட்சமாக 30 நாட்கள் வரை கூட ஆகலாம்.

இதையும் பார்க்க: மின் மீட்டர் இடமாற்றம் கடிதம்

வணிக கடைகள், இண்டஸ்ட்ரியல்களுக்கு கட்டணங்கள் முற்றிலும் வேறுபடும். கட்டணங்கள் ஆன்லைனில் அல்லது நேரில் சென்றும் கட்டலாம். கட்டணங்கள் கட்டிய ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குள் உங்கள் மீட்டர் மற்றும் இதர பிரச்சனைகள் தீர்க்கப்படும்.

இதையும் பார்க்க: தற்காலிக மின் இணைப்பு கட்டணம்