Udr க்கு முந்தைய ஆவணங்கள்

Udr க்கு முந்தைய ஆவணங்கள் - இதனை ஆங்கிலத்தில் Updated Revenue Records என்றும் சொல்லலாம். இதனை தமிழில் கூற வேண்டுமென்றால் நில உடமை பதிவு மேம்பாட்டுத்திட்டம் என்றும் அழைக்கலாம். மிகவும் எளிமையாக Udr என்று சொல்லலாம். Udr க்கு பிறகு தயார் செய்திருந்த ஆவணங்கள் கணினி மயமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதற்கு முன்னர் இருந்த ஆவணங்களை எங்கே கேட்பது எங்கே வாங்குவது குழப்பங்கள் தற்போது ஏற்பட்டு வருகின்றன.

Udr க்கு முந்தைய ஆவணங்கள்


பட்டா சம்பந்தப்பட்ட எந்த ஒரு விஷயங்களையும் அறிவதற்கு நாம் VAO அலுவலகத்திற்கு செல்வோம். ஆனால் ஒரு துறையில் ஒரு குறிப்பிட்ட விஷயங்களை மட்டுமே செய்ய முடியும். அந்த வகையில் யூ டி ஆர் க்கு முன்னர் இருந்த ஆவணங்களை நாம் பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெறலாம். அப்படி என்னென்ன ஆவணங்களை நாம் பார்க்க இயலும் என்பதை கீழே காணலாம்.

இதையும் படிக்க: TamilNilam

1. பழைய நில அளவை புலப்பட சுவடு

2. பழைய செட்டில்மென்ட் பதிவேடு ( Osr )

3. மறு அச்சிடப்பட்ட நிலவரி திட்ட செட்டில்மென்ட் பதிவேடு ( Rsr )

4. நிலவரி திட்ட அலுவலக வழக்கு சம்பந்தமான கோப்புகள்

5. நிலவரி பதிவேடு நகல்

5. பழைய அ பதிவேடு, இனாம்.

குறிப்பு

மேற்கண்ட ஆவணங்களின் நகல்களை பெற தகவல் அறியும் உரிமை பொது தகவல் அலுவலர் மூலம் பெற்றுக்கொள்ளவும்.

இதையும் படிக்க: தகவல் அறியும் உரிமை சட்டம் மாதிரி மனுக்கள் Pdf