உங்கள் தொகுதியில் முதலமைச்சர் மனு செய்வது எப்படி online complaint

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் மனு செய்வது எப்படி ungal thoguthiyil muthalamaichar Pdf online Login online complaint and contact number ( உங்கள் தொகுதியில் முதலமைச்சர் புகார் திட்டம் மனு அளிப்பது எப்படி தொலைபேசி எண் ) - இந்த திட்டத்தின் பெயர் ஒருங்கிணைந்த உள்ளடக்கிய மக்கள் குறை தீர் முகாம் மேலாண்மை திட்டம் என்று பொருள். இதில் மக்களாகிய நாம் பல்வேறு கோரிக்கைகள், மனுக்கள், புகார்களை தெரிவித்து கொள்ள முடியும். இதனால் மக்கள் வீட்டில் இருந்தபடியே மனு அல்லது புகார்களை ஒரே ஒரு நிமிடத்தில் கொடுக்க முடியும். அது மட்டுமில்லாமல் இது நேரடியாக முதலமைச்சர் பார்வையின் கீழ் விசாரிக்க படிவதால் உங்கள் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் மனு செய்வது எப்படி


இதில் நீங்கள் ஆதாரங்களோடு அனுப்பினால் மிகவும் உதவிகரமாக இருக்கும். அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் உள்ள புகார், மனு மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். மற்றபடி, தனியார் துறை சார்ந்த விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். உதாரணமாக அரசு திட்டங்கள் வராமல் இழுத்தடிப்பது மற்றும் குடிநீர் சம்மந்தமான பிரச்சனைகள் போன்றவைகள் போல் கேட்கலாம். மேலே கூறிய இரண்டு புகார்கள்  மட்டுமே கொடுக்க வேண்டும் என்று நினைத்து கொள்ள வேண்டாம். மாறாக அதே போன்று ஒவ்வொரு துறைகளிலும் உங்கள் புகார்களையும் கொடுக்கலாம். அது எந்த வகை துறையாக இருந்தாலும் சரி.

மாவட்ட ஆட்சியரின் பெயர்கள் 2023

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் contact number

மனு உங்களுக்கு எழுத தெரியவில்லை என்றால் அல்லது எந்த துறையின் கீழ் புகார்கள் மற்றும் மனுக்களை கொடுப்பதும் தெரியவில்லை என்றால் 1100 கட்டணம் இல்லாத தொலைபேசி எண்ணிற்கு கால் செய்து உங்கள் கேள்விக்கான பதில்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ஆனால் இதில் புகார்களை எப்படி தெரிவிப்பது மற்றும் சந்தேகங்கள் மட்டுமே கேட்க வேண்டும். இதில் உங்கள் மனுக்களை கொடுக்க இயலாது. காலை 07 மணி முதல் இரவு 10 மணி வரையும் உங்கள் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பித்த 100 நாட்களுக்குள் உங்கள் விண்ணப்பங்களுக்கான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். Email மூலம் விண்ணப்பங்கள் அனுப்ப cmhelpline.tn.gov.in என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.

முதலமைச்சர் தனிப்பிரிவு மாதிரி மனு