உறுதிமொழி பத்திரம் என்றால் என்ன ( உறுதிமொழி பத்திரம் எழுதுவது எப்படி ) - இந்த வார்த்தைக்கு இரண்டு விதமான வேறு பெயர்களும் உண்டு. முதலில் அதனை பற்றி பார்க்கலாம். உறுதிமொழிக்கு பிரமாணம், அபிடவிட் என்கிற வார்த்தைகளும் உள்ளது. இதில் பெரும்பாலும் அபிடவிட் வார்த்தையை நீதிமன்றங்களில் வரும் வழக்குகளில் உபயோகப்படுத்துவார்கள். முக்கியமாக உறுதிமொழி என்றால் ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தைகள் சரியானதாக இருக்கும் என்று வாய்மொழியாக இல்லாமல் எழுத்துபூர்வமாக எழுதி கொடுப்பது ஆகும். சம்பந்தப்பட்டவர் எழுதினாலும் அல்லது அவர் எழுத சொல்லி எழுதினாலும் ஒன்று தான்.
பிரமாண பத்திரம் என்றால் என்ன
ஏதாவது ஒரு ஆவணங்கள், தொலைந்துபோன ஆவணங்கள், பிறப்பு சான்றிதழ், பாஸ்போர்ட் அப்ளை செய்ய, வேலை செய்யும் கம்பெனிகளில் அபிடவிட் கேட்கும் வாய்ப்புகள் ஏராளம். இதில் நாம் வெவ்வேறு காரணங்களை காட்டி எழுதினாலும் உறுதிமொழி ஒன்று தான்.
இதையும் படிக்க: கடன் பத்திரம் எழுதும் முறை Pdf
உறுதிமொழி உண்மைத்தன்மை வாய்ந்தவையாக இருக்க வேண்டும். அதில் ஏதாவது பொய் இருக்கும் பட்சத்தில் நிச்சயம் தண்டனை கிடைக்கும். மேலும் நோட்டரி பப்ளிக், நீதிபதிகள், தேர்தல் ஆணையர், உறுதிமொழி ஆணையர் இவர்களில் மட்டும் தான் உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்து வாங்க முடியும்.
நில உச்சவரம்பு சட்டம்