உயில் எத்தனை ஆண்டுகள் செல்லும் - இன்றைய காலகட்டத்தில் உயில் எழுதுவதென்பது குறைந்து விட்டது என்று சொல்லலாம். விருப்பு ஆவணம், விருப்புறுதி ஆவணம் அல்லது இறுதி ஆவணம் என்று இந்த உயிலை அழைக்கலாம். சொத்தின் உரிமையாளர் தான் இருக்கின்ற காலத்திற்கு பிறகு யார் யார் அனுபவிக்க வேண்டும் என்று வாரிசுரிமை சட்டம் 1925 விதி 57 கீழ் எழுத்துபூர்வமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறது.
உயிலை பதிவு செய்வதும் பதிவு செய்யாமலும் இருப்பதும் உங்கள் விருப்பமே. ஆனால் பதிவு செய்வது மிகவும் நன்மையை தரும். ஏனெனில் பதிவு செய்யப்பட்ட உயிலுக்கு நீதிமன்றம் முன்னுரிமை அளிக்கும். மற்ற வாரிசுகளுக்கு பிரச்சனை ஏற்படாமல் தவிர்க்கலாம்.
சாதாரண வெள்ளைத்தாளிலும் பத்திரத்தாளிலும் எழுதலாம். சிவில் வழக்கறிஞர் கொண்டு எழுதுவது நல்லது. எழுதும் ஒவ்வொரு பக்கத்திலும் கையொப்பம் கட்டாயம் இருக்க வேண்டும். மேலும் இரு சாட்சிகள் கொண்டு எழுத வேண்டும். கடைசியாக எழுதப்பட்டஉயிலே செல்லும். முக்கியமாக சொத்தின் விவரங்களை சரியாக இருக்க வேண்டும்.
இதையும் வாசிக்க: உயில் எழுதுவது எப்படி
உயிலானது எழுதப்பட்ட நாளில் இருந்து எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் செல்லும் என கூறப்பட்டு வருகிறது. இது எந்த வகையில் உண்மை என்று தெரியவில்லை. சொத்தின் உரிமையாளருக்கு வாரிசாக இருந்தால் உடனடியாக பத்திர பதிவு செய்து பெயரை மாற்றிக்கொள்ளலாம். ஆனால் அதனை மெய்ப்பித்தல் அவசியமாகிறது. மேலும் இதற்காக தனியாக கட்டணங்கள் செலுத்துதல் அவசியமாகின்றது.
இதையும் வாசிக்க: உயில் நீதிமன்ற தீர்ப்பு