உயில் நீதிமன்ற தீர்ப்பு

உயில் நீதிமன்ற தீர்ப்பு -  உயில் தனது வாழ்நாள் பிறகு அதனை யார் யார் அனுபவிக்கப்போகிறார்கள் என ஒரு பத்திரத்தில் கைப்பட எழுதுவது ஆகும். உயில் ஆனது பத்திரத்தில் தான் எழுத வேண்டும் என்பதில்லை. மாறாக ஒரு வெள்ளைத்தாளில் கூட எழுதலாம். அது நாம் பத்திரத்தில் எழுதி முறையாக பதிவு செய்வதால் பிற்காலத்தில் உரிய நபருக்கு சொத்தானது சென்று விடும். பதிவு சட்டம் 18 இன் படி உயிலை நாம் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று இல்லை.

உயில் நீதிமன்ற தீர்ப்பு


ஒருவர் தான் இருக்கும்போதே உயில் எத்தனை வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமென்றாலும் எவ்வளவு முறை வேண்டுமானாலும் எழுதலாம். இறுதியாக அவர் எந்த உயிலை எழுதினாரோ அந்த உயில் தான் செல்லும். மேலும் உயில் அவரும் கைப்பட எழுதலாம். இல்லையென்றால் வேறு ஒரு ஆவண எழுத்தாளர் கொண்டும் எழுதலாம். இரண்டு சாட்சிகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். அதிலும் அவர்கள் இரண்டு பேரும் உயில் சொந்தக்காரரை விட மிகவும் வயது குறைந்தவர்களாக இருக்க வேண்டும்.

உதாரணமாக ஒருவர் உயில் எழுதி தகுந்த சாட்சிகளுடன் எழுதி அதனை பதிவு செய்த பின்னர் அந்த இரண்டு சாட்சிகளும் இல்லை அல்லது  கிடைக்கவில்லையென்றால் அந்த உயில் நீதிமன்றத்திற்கு சென்று விடும். இப்பொழுது நாம் என்ன செய்வது என்று திகைத்து நிற்போம். இதற்காக நாம் அந்த இரண்டு சாட்சிகளின் ஒருவர் கையெழுத்தை நிரூபிக்க வேண்டும். அல்லது உயில் எழுதும் நபர் கையெழுத்து வேறு ஒரு ஆவணங்களில் இருந்தால் அவர்கள் வாரிசுக்கு அந்த உயிலானது சென்று விடும்.

மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பின்வருமாறு

சொத்தின் உரிமையாளர் 1971 இல் ஒரு நபருக்கு உயில் எழுதி வைத்துள்ளார். அதற்கு  சொத்தின் உரிமையாளர் அவர்கள் 2006 ஆம் ஆண்டு இன்னொருவருக்கு விற்பனை கிரையம் செய்து வைத்துள்ளார். முதலில் உயில் எழுதப்பட்ட நபர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனக்கு எழுதப்பட்ட சொத்துக்கள் குறித்த வழக்கு தொடுத்தார்.

முதலில் எழுதப்பட்ட உயில் ரத்து செய்யப்படாமல் இருந்தாலும் இன்னொரு விற்பனை கிரையம் உண்மையான சொத்தின் உரிமையாளரே எழுதி வைத்துள்ளதால் பழைய உயிலானது செல்லாது என்று தீர்ப்பளித்தது.

இந்த பட்டாசிட்டா.கோ.இன் இணையதளம் உயில் சம்பந்தப்பட்ட அனைத்து தலைப்புகளையும் கொடுத்து வருகிறது. உயில் வகைகள், பராமரிப்பது மற்றும் இதர கேள்விகள் கீழே தரப்பட்டுள்ளன.

உயில் என்றால் என்ன

உயில் பதிவு செய்வது எப்படி

செல்லாத உயில்

உயில் சாசனம் மாதிரி

Fb பேஜ்