உயில் பதிவு கட்டணம் - தற்போது புழக்கத்தில் அதிகமாக பேசக்கூடிய ஒரு பரிவர்த்தனை அல்லது பத்திரம் இந்த உயிலாகும். ஏனெனில் உயில் என்பது தனது வாழ்நாளுக்கு பிறகு யாரை சேர வேண்டும் என்பதனை உறுதிப்படுத்தக்கூடிய ஒரு ஆவண வகை தான் இந்த உயில்.
உயிலை எழுதும் நபர் இல்லாவிட்டால் தான் அந்த உயிலானது நடைமுறைக்கு வரும். மேலும் அதனை பதிவு செய்து வைத்திருத்தல் நன்மை. ஆனால் அதனை பதிவு செய்தல் கட்டாயமில்லை என்று பதிவு சட்டம் 18 சொல்கிறது.
இதையும் படிக்க: பதிவு செய்யப்படாத உயில் செல்லுமா
மற்ற பத்திரங்களின் பரிவர்த்தனை போல் இல்லாமல் இதற்கு முற்றிலும் மாறுபட்ட கட்டணம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் உயிலிருக்கு முத்திரை தீர்வை கட்டணம் கிடையாது. ஆனால் மற்ற பதிவு கட்டணம் உண்டு. இதன் பதிவு கட்டணம் ரூபாய் 500 லிருந்து ரூபாய் 1000 வரை கட்டணமாக பெறப்படுகின்றது.