உயில் சட்டம் PDF விபரம் - உயில் என்பது ஒருவர் தன்னுடைய வாழ்நாள் பிறகு யாருக்கு சொத்து போகும் என்பதை ஒரு ஆவணமாக கூறுவது ஆகும். மேலும் அவர் நம்பகத்தன்மை மிகுந்த நபருக்கு அந்த சொத்தை உயிலாக எழுதுவது ஆகும். இதை எழுதுவதற்கு வயது ஆண் பெண் என இல்லை. யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எழுதலாம்.
உயிலானது கட்டாயம் பதிவிட வேண்டுமா என்றால் நிச்சயம் இல்லை. உங்கள் விருப்பம் தான் என்று சொல்ல வேண்டும். பதிவு செய்தால் ரொம்ப நல்லது ஆகும். உயிலை ரெஜிஸ்டர் செய்வதற்கு சார் பதிவாளர் அலுவலகம் சென்று பதிவிட வேண்டும். அவ்வாறு அதனை முறையாக சீல் இட்டு மாவட்ட ஆய்வாளர் இடம் டெபாசிட் செய்தால் மிகவும் நல்லது ஆகும்.
ஒருவேளை சம்பந்தப்பட்ட நபர் உயிலை எழுதவில்லை என்றால் நிச்சயம் இந்து வாரிசுரிமை சட்டம் படி அவர் மகன்கள் மற்றும்மகள்களுக்கு சென்று விடும். கடைசியாக எழுதிய உயில் தான் செல்லும். அந்த உயிலை மாற்றவும் திரும்ப பெறவும் உயில் சொந்தக்காரருக்கு உரிமை உள்ளது.
கண்டிப்பாக இரண்டு அல்லது மூன்று சாட்சிகள் முக்கியமாக கருதப்படுகிறது. அந்த இரண்டு சாட்சிகள் உங்கள் குடும்ப உறுப்பினர்களாக இல்லாதது நல்லது. உயில் ஒரு 100 ரூபாய் பத்திரத்தில் எழுதி ஒவ்வொரு பக்கமும் இரண்டு சாட்சிகளும் கையொப்பம் கட்டாயம் இட வேண்டும்.