வாக்காளர் அடையாள அட்டை பெறுவது எப்படி - புதியதாக வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டுமென்றால் அதற்குண்டான ஆவணங்களை எடுத்து கொள்ள வேண்டும். இந்த வாக்காளர் அட்டை வாக்களிக்க உபயோகமாகிறது. முன்பு எல்லாம் வாக்களிக்க ஸ்லிப் மற்றும் வோட்டர் ID இருந்தால் தான் உள்ளே விடுவார்கள்.
செல்வ மகள் சேமிப்பு திட்டம் 2022
ஆனால் தற்போது ஆதார் அட்டை, லைசென்ஸ் மற்றும் இதர ஆவணங்கள் இருந்தாலே வாக்களிக்க முடியும். இந்த அட்டை நாம் ஒரு முகவரி Proof ஆக உபயோகப்படுத்தலாம். ஆரம்ப கட்டத்தில் இந்த அட்டையானது மட்டும் தான் ஒருவருக்கு proof ஆக இருந்தது. ஆனால் நாளடைவில் ஆதார் கார்டு, பான் கார்டு, குடும்ப அட்டை, லைசென்ஸ் போன்றவைகள் proof ஆக அனைத்துவற்றிற்கும் எடுத்து கொண்டார்கள்.
வாக்காளர் அடையாள அட்டை பெற தேவையான ஆவணங்கள்
1. பாஸ்போர்ட்
2. ஓட்டுநர் உரிமம்
3. பிறப்பு சான்றிதழ்
4. புகைப்படம்
மேலே குறிப்பிட்டுள்ள ஆவணங்களில் ஏதாவது ஒன்றை அட்ரஸ் proof ஆக எடுத்து கொள்ளப்படும். அனைத்துவற்றும் எடுத்து கொள்ள அவசியமில்லை.
புதிய வாக்காளர் அடையாள அட்டை பெறுவது எப்படி
1. மிகவும் சுலபான முறையில் புதியதாக அட்டையை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். இதற்காக நீங்கள் voter வெப்சைட் சென்று ரெஜிஸ்டர் செய்து கொள்ள வேண்டும். நீங்கள் ஏற்கனவே லாகின் ரெஜிஸ்டர் செய்து இருந்தால் நேரடியாக லாகின் செய்து கொள்ளவும். இல்லையென்றால் ரெஜிஸ்டர் செய்து பிறகு லாகின் செய்து கொள்ளவும்.
2. அப்படி ரெஜிஸ்டர் தேர்வு செய்த உடன் உங்கள் மின்னஞ்சல் அல்லது தொலைபேசி எண்ணை அதில் போடவும்.
3. இதையெல்லாம் செய்த முடித்த பின்னர் புதிய வோட்டர் ID க்கு அப்ளை செய்ய போகிறீர்களா அல்லது அப்டேட் செய்ய போகிறீர்களா என்று கேட்கும். அதனால் முதலில் வருவதை தேர்வு செய்து கொள்ளவும்.
4. அடுத்து உங்கள் பெயர் , Initial மற்றும் மாநிலத்தை தேர்வு செய்யவும்
5. பிறகு நீங்கள் ஏற்கனவே அப்ளை செய்து உள்ளீர்களா அல்லது இப்போதுதான் அப்ளை செய்கிறீர்களா என்பது போல் கேட்கும்
6. அடுத்ததாக நீங்கள் இந்தியரா அல்லது இந்தியராக இருந்து வெளிநாட்டில் வசிப்பவரா அல்லது இந்தியர் இல்லை என்பதை தேர்வு செய்யவும்
7. இறுதி ஸ்டேப் ஆக அனைத்து விதமான உங்கள் விவரங்கள் மற்றும் ஆவணங்கள் அப்லோட் செய்ய வேண்டும்
அனைத்து விதமான படிகளையும் முடித்த பின்னர் உங்களுக்கான ஒரு ரெபெரென்ஸ் நம்பர் ஒன்றை கொடுப்பார்கள். அதனை வைத்து உங்கள் அப்ப்ளிகேஷன் எந்தநிலையில் உள்ளது என்று அவ்வப்போது செக் செய்து கொள்ளலாம்.