வாக்காளர் பட்டியல் pdf 2024 download பதிவிறக்கம் - ஒவ்வொரு இந்திய குடிமகனும் வாக்களிப்பது ஜனநாயக கடமையாகும். ஆனால் எந்த ஒரு தேர்தலிலும் முழுமையான வாக்கு பதிவு இந்தியாவில் எங்கும் நடந்ததில்லை. இதற்காக அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இப்படி இருக்கும் நேரத்தில் வாக்களிக்க முன் வரும் நபர்களில் ஒரு சில பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாமல் போகிறது.
அதனை தடுக்கவே முன் கூட்டியே நாம் எங்கு வாக்களிக்க போகிறோம், வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்பதை இணையதளத்திலும் இலவச எண்களிலும் நம்மால் செக் செய்ய இயலும். வீட்டில் இருந்தபடியே இலவச டோல் பிரீ நம்பர் வைத்து செக் செய்யலாம்.
முதலில் நீங்கள் உங்கள் ரெஜிஸ்டர் செய்த அல்லது ரெஜிஸ்டர் செய்யாத தொலைபேசியில் ECI இடைவெளி விட்டு வோட்டர் ID நம்பர் என டைப் செய்து 1950 எண்ணிற்கு ஒரு SMS அனுப்பினால் உங்கள் தொலைபேசி எண்ணிற்கு உங்கள் பெயர் வாக்காளர் லிஸ்டில் உள்ளதா இல்லையா என்பதை காண்பிக்கும்.
இரண்டாவதாக வாக்காளர் எங்கு சென்று வாக்களிப்பது என்பதையும் 1950 எண்ணிற்கு ECIPS டைப் செய்து வோட்டர் எண் கொடுத்தால் எந்த இடத்தில் நீங்கள் வாக்களிக்கலாம் என்பதையும் தெள்ள தெளிவாக அந்த குறுஞ்செய்தி வழியாக நாம் பார்க்க இயலும்.
மூன்றாவதாக இணையத்தளம் வழியாக நாம் பார்க்க முடியும். Electoralsearch இல் சர்வீஸ் செக்ஷனில் சென்று சர்ச் கொடுத்தால் உங்கள் பெயர், மாநிலம், மாவட்டம், தந்தை பெயர் இவற்றை எல்லாம் சரியாக தந்தால் உங்கள் பெயர் இருக்கிறதா இல்லையா என்பதனை கீழேயே காட்டி விடும்.
வாக்காளர் அடையாள அட்டை பெறுவது எப்படி