வாஸ்து அளவுகள் 2024

வாஸ்து அளவுகள் 2024 ( vastu alavugal in tamil ) - முதலில் வஸ்து என தான் இருந்தது. நாளடைவில் வாஸ்து என பெயர் போனது. ஒரு பொருள் எங்கெங்கே இருக்க வேண்டும் அல்லது அமைய வேண்டும் என்பதை அறிய வாஸ்து பயன்படுகிறது. நிலம், நீர், காற்று, வானம் மற்றும் தீ இந்த அடிப்படையில் இந்த வாஸ்து சாஸ்திரங்கள் இயங்குகின்றன. வாஸ்து சாஸ்திரம் வீடு கட்ட அளவுகள் என்பது அளவுகளை குறிப்பது ஆகும். அதனால் மனையடி சாஸ்திரம் கலந்தது தான் வாஸ்து. ஒரு இடம் வாங்கும்போது நாம் வாஸ்துகளை பார்க்காமல் வீடு கட்டும்போது மட்டுமே பார்ப்போம். ஏனெனில் ஒரு மனையை நாம் வாங்கும்போது அதன் அளவீடுகளை அதிகப்படுத்தியோ அல்லது குறைவாகவோ வாங்க முடியாது. அதாவது இருக்கின்ற மனையை மட்டும் தான் வாங்க முடியும். அதை கூட்டவோ குறைக்கவோ முடியாது. அப்படி குறைத்தால் நம்முடைய நில வரைபடத்தில் பிழைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

வாஸ்து அளவுகள் 2024


வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு, வடகிழக்கு, வடமேற்கு, தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு என எட்டு திசைகள் காணப்படுகிறது. இதில் ஒவ்வொரு திசையிலும் வீடு அல்லது மனையின் அளவுகளை இந்த திசையின் மூலம் எந்த பக்கம் வைக்கலாம் எந்த பக்கம் வைக்க கூடாது என்பதை வாஸ்து தெளிவுபடுத்தும்.

ராசி நட்சத்திரம் அட்டவணை

வீடு கட்டும் அளவுகள் மற்றும் திசைகள்

1. கிழக்கு பகுதிகளில் அல்லது வடக்கு பகுதிகளில் வீடு கட்டும்போது தாழ்வாக இருக்க வேண்டும்.

2. மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் வீடு கட்டும்போது உயர்வானதாக கட்ட வேண்டும்.

3. தென்கிழக்கு திசை உயரம் குறைவானதாகவும் வடமேற்கு திசை உயரம் அதிகமாகவும் தென்மேற்கில் உயரம் அதிகமாக மற்றும் வடமேற்கில் உயரம் குறைவாகவும் இருத்தல் நல்லது.

ஒவ்வொரு அடியும் ஒவ்வொரு பலனை தரும். அப்படி நன்மை பயக்கும் அடிக்கணக்கை மட்டுமே கீழே அப்டேட் செய்துள்ளோம். இதில் வராத அடி கணக்கில் நீங்கள் வீடுகளை கட்டினால் அதோடு 1 இன்ச், 2 இன்ச் சேர்த்து கட்டினாலே போதுமானது. 1 அடி என்பது 12 அங்குலமாகும். அதாவது 30 சென்டிமீட்டர் ஒரு அடியாகும். நமது நிலங்கள் சென்ட் கணக்கில் உள்ளமையால் அதனை அடி கணக்கிற்கு கன்வெர்ட் செய்த பின்னர் சரியான அளவீடுகளை தெரிந்து கொள்ளுங்கள்.

இன்றைய நல்ல நேரம் 2024

வீடு கட்ட வாஸ்து அளவுகள்

100 - கடவுள் அருள்

97 - தொழிலில் உயர்வர்

91 - கல்வி

90 - வாழ்கை வசதி நன்றாக இருக்கும்

87 - செல்வச்செழிப்பு

77 - எல்லா வசதியும் வரும்

73 - அரசயோகம்

68 - சொத்து சேரும்

54 - லாபம் பெருகும்

52 - செல்வம், பணம் செழிக்கும்

42 - லட்சுமி வரும்

41 - செல்வமாக சேரும்

31 - தெய்வ கடாட்சம் உண்டாகும்

27 - செல்வம் உண்டாகும்

22 - மகிழ்ச்சி

20 - ராஜயோகம்

17 - ஜெயித்து கொண்டே இருப்பீர்கள்

16 - மிகு செல்வம்

10 - பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்

06 - நன்மை.

தமிழில் 2025 வாஸ்து தேதிகள்