வாகன பெயர் மாற்றம் செய்வது எப்படி

வாகன பெயர் மாற்றம் செய்வது எப்படி - பொதுவாக நாம் வாகனம் நாம் இரண்டாவதாக வாங்கும் பொழுது அதனை பெயர் மாற்றம் செய்து இருக்கவே மாட்டோம். ஏனென்றால் அதை ஏன் நான் மாற்ற வேண்டும் மற்றும் NOC தான் வாங்கிவிட்டோம் என்று நினைப்பு தான். ஆனால் அத்தகைய வாகனம் நாம் இரண்டாவதாக வாங்கி பெயர் மாற்றம் செய்ய இங்கே சில எளிய வழிகளை காண்போம்.

 NOC வாங்கி விட்டால் வாகன பெயர் உங்கள் பெயருக்கு வந்து விடும் என்று இருந்து விடாதீர்கள். ஏனென்றால் நீங்கள் அந்த வாகனம் உங்கள் பெயரில் இருந்தால் தான் அந்த வாகனம் முழுமையாக உங்களுக்கு சொந்தமாகும். அதை எவ்வாறு பெயர் மாற்றம் செய்வது என்று பார்ப்போம்.

வாகன பெயர் மாற்றம் செய்வது எப்படி


1. முதலில் நீங்கள் Parivahan வெப்சைட் ற்கு செல்லுங்கள்.

2. அதில் என்டர் vehicle registration நம்பர் என்று இருக்கும். அதில் உங்களுடைய நெனெகல் வாங்கிய வண்டியின் நம்பர் போடுங்கள்.

3. அதை நீங்கள் தேர்வு செய்த உடன் அந்த வண்டி எந்த RTo கீழ் உள்ளது என்பதை காண்பிக்கும். பிறகு Proceed option யை தேர்வு செய்யுங்கள்.

4. Transfer of ownership option யை தேர்வு செய்யுங்கள். 

5. Registration நம்பர் மற்றும் Chassis number என்டர் செய்யவும்.

6. வண்டியின் Details அனைத்தும் காண்பிக்கும்.

7. முக்கியமாக நீங்கள் இன்சூரன்ஸ் செய்ய பட்டுவிட்டதா என்று பார்க்க வேண்டும். ஒருவேளை இன்சூரன்ஸ் செய்ய வில்லை என்றால் வாகனம் உங்கள் பெயருக்கு மாற்றம் செய்வது முடியாது.

8. பிறகு அதில் யார் பெயருக்கு மாற்ற போகிறீர்களோ அந்த பெயர் முகவரி மொபைல் நம்பர் என்டர் செய்ய வேண்டும்.

9. கட்டணமாக 350 லிருந்து 500 வரையும் செலுத்த நேரிடும். அது வாகனத்தை பொறுத்து பணம் வேறுபடும். 

10. Form 29 மற்றும் போரம் 30 Fill Up செய்து உங்கள் ஊரில் அல்லது நகராட்சியில் உள்ள RTO விடம் கொடுத்து விடுங்கள்.

11. அந்த form 29 மற்றும் Form 30 இரண்டுமே நீங்கள் அப்ளை செய்யும்போதே அதில் காட்டி விடும்.

வாகன விற்பனை பத்திரம் மாதிரி

அரசு கெஜட்டில் பெயர் மாற்றம் செய்வது எப்படி