வழிகாட்டி மதிப்பு பத்திர பதிவுத்துறை - பதிவுத்துறையில் மிகுந்த வருமானம் வரக்கூடியதில் மனைகளும் ஒன்றாகும். ஒவ்வொரு வருடமும் 12, 000 கோடிக்கும் மிகாமல் வருமானம் ஈட்டி கொண்டு இருக்கிறது இந்த பதிவுத்துறை. வழிகாட்டி மதிப்பில் அனைவரும் பதிவு செய்வதால் அரசாங்கத்திற்கு வருமானம் கூடுகிறது. நிலத்தின் தன்மையை பொறுத்து இங்கு விலைகள் நிர்ணயிக்கப்படுவதில்லை. மாறாக ஏரியா மற்றும் வருவாய் வீதம் என பல்வேறு காரணங்கள் அடிப்படையில் மட்டுமே வழிகாட்டு மதிப்பு அரசு நிர்ணயம் செய்து கொள்கிறது.
அதுமட்டுமில்லாமல் கிராமப்புறங்களிலும் மற்றும் நகர்ப்புறங்களிலும் இது நடைமுறையில் இருக்கிறது. நீங்கள் உங்கள் மாவட்டத்திற்கான வழிகாட்டி மதிப்பை tnreginet வெப்சைட் இல் அறிந்து கொள்ளுங்கள். இந்த இணையத்தளமானது 2002 முதல் 2017 வரை உள்ள Guideline value வை காட்டும். இதில் முக்கிய பெரும் நகரங்கள் மட்டுமே ஒரு சில நேரத்தில் காட்டும். அப்படி உங்கள் ஊர் அல்லது தெரு போன்றவைகளின் மதிப்பு காட்டபடவில்லை என்றால் உங்கள் மனையின் புல எண் அல்லது கிராம புலப்படத்தை வைத்து அதில் வரும் உங்கள் ஊரின் புல எண்களை போட்டு பார்த்தால் எவ்வளவு ஸ்கோயர் பீட் என காட்டி விடும்.
வழிகாட்டி மதிப்பு தேடல்
அரசாங்கம் நிர்ணயம் செய்கிற விலையில் தான் எல்லோரும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். ஆனால் நடைமுறையில் அப்படி இல்லாமல் இரண்டு அல்லது மூன்று மடங்கிற்கு மேல் சொத்துக்களின் மதிப்பு இடைத்தரகர்களை வைத்து உரிமையாளர்கள் விற்று விடுவார்கள். இதனால் அரசாங்கத்திற்கு பெரும் நஷ்டமே ஏற்படுகிறது. ஏனெனில் விற்கப்பட்ட விலைக்கு யாரும் பதிவு செய்யாமல் அரசு வழிகாட்டு மதிப்பை வைத்து ரெஜிஸ்டர் செய்து கொள்கிறார்கள். உதாரணமாக ஒரு ஏக்கர் Guideline Value படி 3, 00, 000 போகிறது என்றால் அதற்கு பத்திர செலவு மற்றும் முத்திரை தீர்வை என கட்டணமாக ரூபாய் 5, 000 லிருந்து 10, 000 ரூபாய் கட்ட நேரிடும் ( உதாரணம் ). ஆனால் விற்கும் நபர் அந்த சொத்தை 10, 00, 000 ரூபாய்க்கு மேல் விற்று பணம் வாங்கி கொள்கிறார். இதனால் அரசுக்கு மீதமுள்ள 7 லட்சத்தின் தீர்வை மற்றும் பதிவு கட்டணம் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.