Vao கிராம கணக்குகள் - கிராம நிர்வாக அதிகாரி எனப்படும் VAO அவர்கள் தான் ஒட்டுமொத்த வருவாய் கிராமங்களின் கிராம கணக்குகளை பராமரிக்கிறார். மொத்தமாக 24 கிராம கணக்குகள் இருந்தாலும் அதில் ஒவ்வொன்றிற்கும் பல செயல்கள், திட்டங்கள் உள்ளன. மேலும் அதில் 1, 2 எப், 4, 8 ஏ, 10டி போன்றவை நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உதாரணமாக பயிராய்வு, சிட்டா தொகுப்பு, மழை கணக்கீடு, தேர்தல் பணிகள் என அடுக்குக்கொண்டே போகலாம். ஒவ்வொரு கிராம கணக்கு எண்ணிலும் பிரிவுகள் இருக்கும். உதாரணமாக 1 என்றால் அதில் ஏ, பி, சி என இருக்கும்.
இதையும் பார்க்க: கிராம கணக்கு எண்
இதனை வருடத்திற்கு ஒருமுறை வீதம் வருவாய் ஆய்வாளர் அவர்கள் மேற்பார்வை இடுவார். அதும் பசலி ஆண்டு என கருதப்படும் ஜூலை ஒன்று முதல் ஜூன் முப்பது வரையும் உள்ள பதிவேடுகளை ஜூலை முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகின்ற ஜமாபந்தி அன்று சமர்ப்பிக்க வேண்டும்.
இதையும் பார்க்க: Tamilnilam