வாரிசு சான்றிதழ் எத்தனை நாட்களில் கிடைக்கும் - வாரிசு சான்றிதழை நாம் பெறுவது மிகவும் சுலபம் தான். அதை சரியான மற்றும் துல்லியமான வழிகளில் செய்தால் உடனடியாக வாரிசு சான்றிதழை நாம் பெற முடியும்.
வாரிசு சான்றிதழை எத்தனை நாட்களில் கிடைக்கும் என்ற கேள்விக்கு பதில் சரியாக 21 நாட்கள். இந்த தேதி மாவட்டங்களுக்கு மாவட்டங்களுக்கு வேறுபடும் என்பதை நீங்கள் நினைவில் கொள்தல் வேண்டும். முதலில் வட்டாச்சியர் இடம் நீங்கள் கொடுத்த மனு வருவாய் ஆணையரிடம் சென்று கிராம நிர்வாக அதிகாரிடம் விசாரித்து துணை வட்டாச்சியர் பரிசீலனை செய்து இறுதியாக வட்டாச்சியர் உங்களிடம் வாரிசு சான்றிதழை வழங்குவார்.
இதில் எந்த வித பிரச்சனை இல்லாமல் இருந்தால் உடனடியாக வந்து விடும். மாறாக யாராவது ஆட்சேபனை தெரிவித்தால் கொஞ்சம் தாமதமாகத்தான் வரும். இதற்காக நாம் நேரில் சென்றும் இ சேவை மையத்திற்கு சென்றும் விண்ணப்பிக்கலாம். 60 ரூபாய் கட்டணம் மற்றும் அதில் கேட்கும் ஆவணங்களை இணைத்தல் அவசியம். மேலும் நீங்கள் அப்ளை செய்த பிறகு உங்களுக்கு TN என ஆரம்பிக்கும் 13 இலக்க எண்கள் கொண்ட ஒரு ஒப்புகை சீட்டு ஒன்றை வழங்குவார்கள். அதனை வைத்து நாம் ஸ்டேட்டஸ் தெரிந்து கொள்ளலாம்.
இரண்டாம் நிலை வாரிசு என்றால் என்ன