வாரிசு சான்றிதழ் வாங்க தேவையான ஆவணங்கள் - வாரிசு சான்றிதழ் ஆங்கிலத்தில் (Legal Heir Certificate ) என்பர். பொதுவாக அவர்கள் வீட்டில் சொத்து, பணம் சம பாகங்களாக செல்வதற்கு இத்தகைய சான்றிதழ் use ஆகிறது. மேலும் நாம் அதனை பெறுவதற்கு ரொம்ப ரிஸ்க் எல்லாம் எடுக்க தேவையில்லை. இதனை எப்படி எங்கு பெறுவது என்று பார்ப்போம். மொத்தம் இரண்டு அல்லது மூன்று சாய்ஸ் இருக்கிறது. அதன் விவரங்கள் பின்வருமாறு இணைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வாரிசு சான்றிதழ்
1. பொது இ சேவை மையம்
2. வருவாய் துறை அலுவலகம் ( கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் தாசில்தார் அலுவலகம் )
3. மாண்புமிகு நீதிமன்றம்
பொதுவாக நீங்கள் மற்ற சான்றிதழ்கள் போல் தான் அப்ளை செய்ய வேண்டும். அதற்குண்டான ஆவணங்களை பூர்த்தி செய்து கொடுங்கள். உங்கள் மாவட்டத்திற்கு ஏற்ப நாட்கள் மாறுபடும். ஒரு சில மாவட்டங்களில் ஒரு வாரம் ஆகும்.
இந்த வாரிசு சான்றிதழ் அப்ளை செய்வதற்கு முன்னர் சில முக்கிய ஆவணங்களாக கருதப்படும் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, பிறப்பு சான்றிதழ் மற்றும் அலுவலகங்களில் கேட்கும் இதர ஆவணங்கள் இருந்தாலே போதுமானது. பொதுவாகவே இதற்கு நிலையான கட்டணங்கள் என்றால் அது ரூபாய் 60 மட்டுமே. ஆனால் இந்த கட்டணமும் ஒரு சில ஊர்களில் வேறுபடலாம்.
வாரிசு சான்றிதழ் சட்டம்
இதனை சொந்த மகன்கள், மகள்கள், மனைவி மற்றும் உடன் பிறப்புகள் அப்ளை செய்யலாம்.
முதலில் அந்த உரிமை நேரடி வாரிசு மனைவிக்கு தான் செல்லும். அவர்களுக்கு பிறகு மகன் அல்லது மகள். அவர்களும் இல்லாத பட்சத்தில் பேரன்கள் மற்றும் பேத்திகள் அப்ளை செய்யலாம்.
இதில் யாருமே இல்லாத நிலையில் உடன் பிறந்த சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் அப்ளை செய்யலாம். அதாவது இவர்கள் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை வாரிசு எனலாம்.
வாரிசு சான்றிதழ் download
நீங்கள் டவுன்லோட் செய்ய எளிமையான வழிகள் உள்ளன. அவற்றை இங்கே காண்போம். முதல் நீங்கள் Tnesevai சைட் சென்று லாகின் செய்யுங்கள்.
இ சேவை மையம் வாரிசு சான்றிதழ்
1. நீங்கள் சான்றிதழை பெற உங்கள் அருகில் உள்ள இ சேவை மையத்தை அணுகி அப்ளை செய்யுங்கள்.
2. கட்டணம் வசூலிக்கப்படும் ( ரூபாய் 60 முதல் 100 ).
வாரிசு சான்றிதழ் எத்தனை நாட்களில் கிடைக்கும்
1. முதல் முப்பது நாட்களுக்குள் கண்டிப்பாக வந்து விடும்.