வருவாய் ஆய்வாளர் பணிகள் மற்றும் கடமைகள் - முதலில் வருவாய் ஆய்வாளர் யார் என்பது பற்றி பார்ப்போம். கிராம நிர்வாக அலுவலருக்கு மேலே பணிபுரியும் அதிகாரி இவர் ஆவார். வி ஏ ஓ மட்டுமே இல்லாமல் அவருக்கு கீழே பணிபுரியும் கிராம உதவியாளர்களின் பணிகளை சரிபார்ப்பது இவரின் முக்கிய கடமையாகும்.
வருவாய் ஆய்வாளரை கிராமத்தில் ஆரையர் என்றும் ஆங்கிலத்தில் Revenue Inspector என்றும் அழைப்பார்கள். இவர் நேரடியாகவும் அல்லது கிராம நிர்வாக அலுவலகத்தில் வி ஏ ஓ வாக ஆறு முதல் பத்து வருடங்கள் வரையும் பணி செய்து அதன் மூலம் வருவாய் ஆய்வாளராக பணி அமர்த்தப்படுவார். இந்த பணியிலும் இளநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் என இரண்டு பதவிகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பிர்காக்கள் என்றால் என்ன
தாலுகா எனப்படும் வட்டங்களை சிறு சிறு வட்டங்களாக பிரிப்பர். அதாவது வருவாய் கிராமங்களை உள்ளடக்கியது சிறு வட்டங்களாகும். இதனை குறு வட்டம் அல்லது உள் வட்டம் அல்லது பிர்கா என்றும் அழைக்கலாம். தற்போது தமிழ்நாடு பிர்காக்கள் எண்ணிக்கை 2022 மொத்தம் 1190 ஆகும்.
நகராட்சி ஆணையர் பணிகள்
வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தின் பணிகள்
1. வி ஏ ஓ மற்றும் அவர்களுக்கு கீழ் பணிபுரியும் தலையாரி வேலைகளை சரிபார்த்தல்
2. பயிர்களை ஆய்வு செய்தல்
3. முதியோர் உதவித்தொகை ஆய்வு செய்தல்
4. மக்கள்தொகை கணக்கெடுப்பு
5. வாக்காளர் கணக்கெடுப்பு
6. நிலவரி வசூல் செய்தல்
7. கிராம கணக்குகளை தணிக்கை செய்தல்.
8. இவருக்கு மேலே பணிபுரியும் வட்டாட்சியர் அவர்களுக்கு நிலப்பதிவேடுகளை சமர்ப்பித்தல்.
தமிழ்நாடு நகராட்சி எண்ணிக்கை 2022