வருவாய் துறை அமைச்சர் பெயர் 2024

வருவாய் துறை அமைச்சர் பெயர் 2024 ( varuvai thurai amaichar name 2024 ) - முதலில் வருவாய் துறை என்றால் என்ன என்பதை பற்றி பார்ப்போம். 1786 ஆம் ஆண்டு முதன்முதலில் சென்னை மாகாணத்தில் வருவாய் வாரியம் தொடங்கப்பட்டது. பிறகு 1980 இல் தமிழ்நாடு வருவாய் துறை என பெயரானது. நாளடைவில் 2005 க்கு பிறகு தமிழ்நாடு வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை மற்றும் தணிக்கும் துறை என பெயரிடப்பட்டது. ஆரம்பத்தில் வரிகள் மட்டுமே வசூல் செய்யபட்டிருந்தது. பின்பு நிலவரி என விவசாயிகளிடம் பெறப்பட்டது. அது மட்டுமில்லாமல் நீர் பாசன வரி, மழைநீர் வரி என போடப்பட்டிருந்தது. பெரும்பாலும் மக்கள் வருவாய்த்துறை என்றால் பட்டா மாற்றம், பட்டா வழங்கல் அல்லது பட்டா குறித்த விளக்கங்களுக்கு மட்டுமே உள்ளது என நினைத்து கொள்கிறார்கள். அப்படி நினைப்பது முற்றிலும் தவறாகவும். இங்கே கீழே கொடுக்கப்படும் சேவைகளை வருவாய் துறை செயல்படுத்தி வருகிறது.

வருவாய் துறை அமைச்சர் பெயர் 2024


வருவாய் துறை பணிகள்

1. நிவாரண உதவிகள்

2. அரசு நிலங்களை பாதுகாப்பது

3. நில எடுப்பு

4. நில ஒப்படைப்பு

5. நில சீர்திருத்தம்

6. முக்கியமாக பட்டா வழங்கல்.

இந்த வருவாய் துறை ஆறு விதமான  அதிகாரிகளை வைத்து செயல்படுத்தி கொண்டு இருக்கிறது. அவர்கள் மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர், தாசில்தார், துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகும். மேற்கண்ட அலுவலர்கள் கீழ் கிராம உதவி பணியாளர்கள், நில அளவர் மற்றும் இதர அரசாங்க பணியாளர்களும் வேலை பார்ப்பார்கள்.

மண்டல துணை வட்டாட்சியர் பணிகள்

தமிழ்நாட்டில் வருவாய் துறை அமைச்சர் பெயர் மற்றும் ஆணையர் முகவரி

தற்போது உள்ள வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் பெயர் திரு.கே. கே. எஸ். ஆர். இராமச்சந்திரன் ஆவார். வருவாய் நிர்வாக ஆணையர் சென்னை முகவரி எங்கு இருக்கிறது என்றால் எழிலகம், சேப்பாக்கம், சென்னை, 600005 இல் உள்ளது.

தமிழ்நாடு வருவாய் கோட்டங்கள் எண்ணிக்கை 2024