தென்காசி மாவட்டம்

தென்காசி மாவட்டம் - இந்த மாவட்டத்தின் ஆங்கில குறியீடு TS ஆகும். திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தனியாக பிரிக்கப்பட்ட இம்மாவட்டம் 22 நவம்பர் 2019 அன்று உருவாக்கப்பட்டது. 2916 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டுள்ள இந்த மாவட்டமானது சுமார் 33 லட்சம் மக்கள் தொகையை கொண்டிருக்கின்றது. தற்போதைய மாவட்ட ஆட்சியர் பெயர் திரு. பி. ஆகாஷ் அவர்கள் பணிபுரிகின்றார். தென்காசியின் வாகன பதிவு எண்கள் முறையே TN 76 மற்றும் TN 79 ஆகும்.

தென்காசி மாவட்டம்


வருவாய் கோட்டங்கள்

1. சங்கரன்கோவில்

2. தென்காசி

வருவாய் வட்டங்கள்

1. சங்கரன்கோவில்

2. ஆலங்குளம்

3. சிவகிரி

4. தென்காசி

5. செங்கோட்டை

6. திருவேங்கடம்

7. கடையநல்லூர்

8. வீரகேரளம்புதூர்.

இது தவிர ஆறு நகராட்சிகள், பதினேழு பேரூராட்சிகள், பத்து ஊராட்சி ஒன்றியங்கள், 221 கிராம ஊராட்சிகளும், 246 வருவாய் கிராமங்களும், ஐந்து சட்டமன்ற தொகுதிகளும், ஒரு மக்களவை தொகுதியும் உள்ளது.

Tenkasi.nic.in.