வீட்டிலிருந்தபடியே சிறு தொழில் செய்வது எப்படி - இன்றயை சூழ்நிலையில் எவ்வளவு தான் சம்பாரித்தாலும் பணம் போதவில்லை என்று தான் கூற வேண்டும். இதனால் மக்கள் வேலை வேலை என்றும் அலைந்தும் கூட திருப்தி இல்லாத சூழல் ஏற்படுகிறது. ஏனென்றால் இன்றயை விலை வாசிகள் கடும் ஏற்றதோடு இருக்கிறது. அதனால் மக்கள் ஒன்றல்லது இரண்டு வேலைகளை பார்த்தாலும் பணம் பற்றாக்குறை ஏற்படுகிறது.
இந்த பற்றாக்குறை எதனால் ஏற்படுகிறது என்று சொன்னால் அதற்கு ஏகப்பட்ட கரங்கள் என்று அடுக்கி கொண்டே போகலாம் என்றே சொல்லலாம். இப்போது இருக்கும் நேரத்தில் ஒரு தனி மனிதர் குறைந்தது மாதம் பதினைந்தாயிரம் முதல் ரூபாய் இருபதாயிரம் வரையும் சம்பாரிக்கும் நிலை ஏற்படுகிறது. ஆனால் ஒரு இந்த பணமும் மேற்கொண்டு பற்றாமல் அதிகமாக தேவைப்படும் சூழ்நிலை ஏற்படுகிறது.
இதனை தடுக்க மக்கள் சிலர் கடன் வாங்குவது, லோன் வாங்குவது இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். அதனை சரி கட்டவே வேலையில் இருந்து கொண்டே மற்றொரு தொழில் செய்ய வேண்டும் என்கிற நிர்பந்தத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.
1. மெழுகுவர்த்தி
2. ஊதுபத்தி
3. சாம்பிராணி
4. மசாலா பொடி
5. காகித பைகள்
6. காட்டன்
மேலே கூறிய அனைத்தும் நீங்கள் வீட்டில் இருந்தபடியே தொழிலை தொடங்க முடியும். இதற்காக நீங்கள் செலவு செய்யும் பணமும் சற்று குறைவு தான். ஆனால் இந்த தொழில் தொடங்குவதற்கு முன்னர் நீங்கள் செய்யும் பொருட்களை வாங்குவதற்கு டீலர்கள் முன்கூட்டியே இருத்தல் அவசியம். ஒரு வேலை டீலர் இல்லை என்றாலும் பெரிய கடைகளில் முன்கூட்டியே சொல்லி உங்கள் பொருட்களை வாங்குவதற்கு கூறி இருத்தல் முக்கியமாகும். ஏனென்றால் நீங்கள் தொழிலை கடைசி வரையும் செய்வதற்கு முதலில் நல்ல முக்கியத்துவம் இருந்தால் உங்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும்.