வீட்டு மனை அங்கீகாரம் பெறுவது எப்படி - முதலில் அங்கீகாரம் என்றால் என்ன என்பது பற்றி பார்க்கலாம். அங்கீகாரம் என்பது நிலத்தினை அரசு தரப்பில் சரிபார்க்கப்பட்டு அந்த இடத்தில் கட்டிடமோ அல்லது வீடோ கட்டி கொள்வதற்கு முழு அங்கீகாரம் பெற்றுள்ளது என்பதனை குறிக்கும். அங்கீகாரம் வாங்காமல் பல மனை பிரிவுகள் தற்போது வரையும் தமிழ்நாட்டில் உள்ளன.
இதனை அரசாணை எண் 78 மற்றும் 172 இல் காணலாம். இதில் 20.10.2016 க்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் பெறாத மனைகள் விவசாய நிலமில்லாமல் இருந்தால் அவர்கள் உங்கள் பகுதியில் Dtcp அல்லது Cmda அலுவலகத்தில் சென்று ரூபாய் 500 கட்டி ரெஜிஸ்டர் செய்து கொள்ள வேண்டும். மேலும் ஒரு சதுர மீட்டர் மீட்டர் மற்றும் டெவலப்மென்ட் கட்டணம் என கட்ட வேண்டும். இதன் கட்டணம் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் பொறுத்து மாறுபடும்.
இதையும் பார்க்க: கட்டிய வீடு அப்ரூவல் வாங்குவது எப்படி
இதன் காலம் மே 04, 2017 இல் தொடங்கி நவம்பர் 03 வரையும் இருக்கும். அதற்குள் மக்கள் மனை வரன்முறைப்படுத்தி கொள்ளலாம். மேற்கண்ட அரசாணை 78 மற்றும் 172 இல் தெள்ளத்தெளிவாக குறிப்பிட்டுள்ளது.
இதையும் பார்க்க: 1 சென்ட் நிலம் விலை
20.10.2016 க்கு பிறகு பதிவு செய்த அங்கீகாரம் இல்லாத மனைப்பிரிவுகளுக்கு வரன்முறைப்படுத்தாத சூழ்நிலை தற்போது வரை நீண்டுகொண்டே இருக்கிறது. இதற்கு இன்னும் சில காலங்களில் வரும் என எதிர்பார்க்கலாம்.
இதையும் பார்க்க: கிராம பஞ்சாயத்து நிதி ஒதுக்கீடு