VEETU VARI ONLINE PAYMENT

Veetu vari online payment - வீட்டு வரி என்பது நாம் வாழ்கின்ற வீட்டுக்கு வருடந்தோறும் செலுத்தும் வருட சந்தா ஆகும். நாம் ஏற்கனவே நமது Patta Chitta இணையத்தளத்தில் சொத்து வரி கட்டணத்தை பற்றி பதிவேற்றியுள்ளோம். அதுபோல் தான் இந்த வீட்டு வரியும் ஆகும். இதனை ஆங்கிலத்தில் House tax என்று சொல்லுவோம்.

veetu vari online payment


கிராம பஞ்சாயத்துகளை பொறுத்தவரையில் அதன் கீழ் உள்ள கிராமங்களில் உள்ள வீடுகளில் கிராம பஞ்சாயத்து தலைவர் எனப்படும் கிராம ஊராட்சி தலைவர் அவர்கள் வீட்டு வரி செலுத்த அவரின் கீழ் பணிபுரியும் பணியாளரை ஒவ்வொரு வீட்டுக்கு அனுப்புவார். அதற்காக அவர் கொடுக்கும் கால அவகாசம் 3 லிருந்து 5 நாட்கள் ஆகும்.

இதையும் படியுங்க: வீட்டு வரி ரசீது பெறுவது எப்படி

நகராட்சியை பொறுத்தமட்டில் நாம் இருவழிகளிலும் செலுத்த நேரிட்டாலும் ஆன்லைலின் பெரும்பாலும் கட்டுகின்றனர். நீங்கள் நகராட்சி பகுதியை சேர்ந்தவர்களாக இருந்தால் Tnurbanepay என்கிற இணையத்தளத்தில் சென்று உங்கள் வீட்டு வரியை கட்டி ரசீதினை பெற்றுக்கொள்ளலாம்.

இதையும் படியுங்க: பிறப்பு சான்றிதழ் விண்ணப்பம் pdf படிவம்