வீட்டு வரி ரசீது எண் - நாம் நம்முடைய பட்டா சிட்டா கோ இன் இல் ஏகப்பட்ட பதிவுகள் வீடு வரியை பற்றி பேசியுள்ளோம். விருப்பமுள்ள வாசகர்கள் அதனை படித்து பயன் பெறலாம். வீடு வரி என்பது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நமது சொத்தினை பாதுகாக்க வீட்டு வரியும் ஒரு விதத்தில் உதவும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. ஆனாலும் ஒரு சிலர் இன்று வரை வருடந்தோறும் கட்டக்கூடிய வீட்டின் வரியை கட்ட மறுக்கின்றனர்.
வீட்டின் வரியை கட்டாமல் போனால் சொத்திற்கு பிரச்சனை வரக்கூடும். அதாவது நீதிமன்ற வழக்குகளில் வீடு சொந்தம் என்பதற்கு பத்திரம் மற்றும் பட்டா முக்கியம் என்றாலும் அதற்கடுத்து உள்ள வரி ரசீதும் கட்டாயமே.
இதையும் படிக்க: வீட்டு வரி செலுத்துவது எப்படி
பஞ்சாயத்தில் அல்லது நகரங்களில் வழங்கப்படும் வரி பற்று சீட்டு என்பர். இதில் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு எண்களை கொடுப்பர். அது default ஆகவே அதில் வந்து விடும். அந்த எண்ணை வைத்து நாம் எவ்வளவு பணம் செலுத்தினோம் அல்லது இன்னும் எவ்வளவு கட்ட வேண்டும் என்று ஆன்லைனில் செக் செய்து கொள்ளலாம்.
இதையும் படிக்க: சொத்து வரி online payment