வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ( வீட்டு வசதி அரசாணைகள் ) - தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக இந்தியாவிலும் நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களே அதிகம். ஆனாலும் கிராமப்புறங்களில் உள்ள மக்கள் கொஞ்ச கொஞ்சமாக நகரத்திற்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். ஏனெனில் போதிய வசதியின்மை, வீடு இல்லாமல் வசிப்பது, பகுதி தற்காலிக வீட்டில் வசிப்பது, மனைகள் இல்லாமல் இருப்பது போன்ற காரணங்கள் மூலம் மக்கள் இடம் பெயர்ந்து நகரத்திற்கு செல்லக்கூடிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்


இந்தியா முழுவதும் உள்ள நகரங்களில் மக்கள் வாழும் எண்ணிக்கை 27 சதவீதமாகும். தமிழ்நாட்டில் 48 சதவீதத்திற்கு மேல் நகர்ப்புறங்களில் மக்கள் வாழ்கின்றனர். இதே நிலைமை இன்னும் நீடித்தால் 2031 ஆம் ஆண்டு நிச்சயம் தமிழ்நாட்டில் 67 சதவீத மக்கள் நகர்ப்புறங்களில் மட்டும் இருப்பார்கள் என்று கருதப்படுகிறது. இதனை சரிசெய்யவே அரசாங்கமானது 1970 இல் குடிசை மாற்று வாரியம் சென்னை போன்ற பெரிய நகரத்தில் மட்டும் தோற்றுவிக்கப்பட்டது. ஆனால் 1984 இல் அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளிலும் இதனை அமல்படுத்த சட்டம் வகுத்தது. 1985 இல் ஓட்டு வீடு திட்டம், 2015 இல் அனைவருக்கும் வீடு போன்ற திட்டங்கள் அடுத்தடுத்து நிறைவேற்றி கொண்டு இருந்தது.

குடிசை மாற்று வாரியம் வீடு கட்டும் திட்டம் 2023

இந்த வீட்டு வசதித்துறையின் கீழ் வீட்டு வசதி வாரியம், குடிசை பகுதி மாற்று வாரியம், கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள் மற்றும் நகர் மற்றும் ஊரமைப்பு துறை உள்ளிட்டவை அடங்கும். இதற்கு கீழ் தான் பயனாளர்களுக்கு வீடுகள், மனைகள், சீரமைக்க வீடுகளின் கோரிக்கைகள் என இவ்வளவு தீர்மானங்கள் மேற்கண்ட வாரியங்கள், சங்கங்களின் மூலமாக தான் பெறப்படுகிறது.

வீட்டு வசதித் துறை அமைச்சர் 2023

மாண்புமிகு திரு. சு. முத்துசாமி அவர்கள் வீடு வசதி மற்றும் நகர்ப்பகுதி வளர்ச்சி துறையில் பணியாற்றுகிறார். தற்போது இவருக்கு நகர்ப்பகுதி வளர்ச்சி துறை கூடுதலாக கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு கடன் தொகை 2023