வில்லங்க சான்று கட்டணம் பார்க்க ( Manual EC tamil download ) - வில்லங்கம் என்றால் சொத்துக்களின் விவரங்களை மிகவும் துல்லியமாக பார்க்க உதவும். இது வரையும் சொத்தானது யாரிடம் இருந்தது யார் பெயருக்கு வந்தது, இப்போது யார் பெயரில் உள்ளது. இப்படி ஒவ்வொரு முறையும் நடந்த சொத்தின் பரிமாற்றத்தை முழுமையாக கொண்டிருக்கும்.
இதில் நாம் 1975 க்கு பிறகும் இப்போது உள்ள தேதியிலும் நாம் ஆன்லைனிலே வில்லங்க சான்றிதழை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அதற்கு முந்தைய காலங்களில் எடுப்பது அவ்வளவு சுலபம் இல்லை. இதனை தான் Manual EC என்பார்கள்.
இதையும் படிக்க: TamilNilam
மேனுவல் ஈசி எடுக்க வேண்டுமென்றால் சார் பதிவாளர் அலுவலகம் அல்லது 1 இணை சார் பதிவாளர் அலுவலகத்திற்கு தான் செல்ல வேண்டும். 1975 ற்கு முன்னர் எந்த காலங்களில் உங்களுக்கு EC வேண்டுமோ அதனை விண்ணப்ப வடிவில் எழுதி சமர்ப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பம் ரூபாய் 1 ஆகும். முதல் வருடத்திற்கு ரூபாய் 30 மற்றும் ஒவ்வொரு வருடத்திற்கும் தலா 10 ரூபாயும் கட்டணங்களாக Tnreginet வெப்சைட்டில் கட்ட வேண்டும்.