வில்லங்கம் போடுவது எப்படி, என்றால் என்ன - வில்லங்கம் என்பது சொத்து தொடர்பான விஷயங்களை மோசடி அல்லது சொத்தில் பிரச்சனை இருந்தால் அங்கு வில்லங்கம் விழும். அதை எவ்வாறு பார்ப்பது அல்லது போடுவது என்று பார்ப்போம்.
வில்லங்கம் ஏன் போடுகிறார்கள்
உதாரணமாக ஒருவர் பூர்வீக சொத்தை விற்க முயல்கிறார் என்று வைத்து கொள்வோம். அவருக்கு சகோதரர்கள் இரண்டு பேரும் ஒரு சகோதரியும் இருக்கிறார்கள். பத்திரம் மற்றும் பட்டா அவரிடம் இருக்கிறது. அதனால் அவர் இவர்களுக்கு தெரியாமல் மற்றொருவருக்கு கிரையம் செய்து விடுகிறார் என்றால் அப்போது அங்கு வில்லங்கம் விழும்.
ஏனென்றால் அந்த சொத்தானது வாரிசுரிமை அடிப்படையில் இருந்தால் அந்த மூவரையும் கட்டாயம் அவர் கேட்க வேண்டும் அல்லது அவர்களுக்கு பாகப்பிரிவினை செய்து நிலங்களை பிரித்து இருக்க வேண்டும். எதுவுமே செய்யாமல் அவர் சொத்தை இன்னொரு நபருக்கு விற்பனை செய்தால் அந்த மூவரில் யாராவது ஒருவர் வழக்கு தொடுத்தால் நிச்சயம் அவர்களுக்கு உறுதுணையாகத்தான் அரசாங்கம் நிற்கும்.
மேலும் தான் பாகப்பிரிவினை செய்யும் பட்சத்தில் ஒருவருக்கு சரியாகவும் மற்றொருவருக்கு குறைவாகவும் இருந்தால் அந்த குறைவான தொகையோ அல்லது பொருளையோ பெறக்கூடிய நபர் வழக்கு தொடுக்கலாம். இந்த பிரச்சனை சொந்த இரத்தத்தில் மட்டும் வருவதில்லை. வெளியிலும் இந்த பிரச்சனைகள் எல்லாம் வருகிறது.
வில்லங்கம் போட உங்களிடம் சரியான ஆவணங்கள் அல்லது அதன் நகல்கள் இருந்தால் போதுமானது. முக்கியமாக சர்வே எண் , உட்பிரிவு எண் தெரிந்தால் போதுமானது. அதற்கான கட்டணம் செலுத்தி உங்கள் ஊரில் உள்ள அலுவலகத்தில் நாம் வில்லங்கம் போடலாம். நீங்கள் அதை செய்த உடன் கம்ப்யூட்டரில் ஏற்றி விடுவார்கள்.