விஸ்தீரணம் என்றால் என்ன - பழைய ஆவணங்களில் விஸ்தீரணம் என்ற சொல் தோன்றும். இந்த வார்த்தைகள் பெரும்பாலும் மாவட்ட ஆட்சியர் அலுவலத்திலோ, பொது தகவல் அலுவலர், மேல்முறையீடு அலுவலர், நில ஆவண காப்பகம் மற்றும் மத்திய நில அளவை அலுவலகத்திலோ மூல ஆவணங்கள் மற்றும் பழைய செட்டில்மென்ட் ஆவணங்களில் நாம் வாங்கும்போது தென்படும். பொதுவாகவே நமது நிலம் பழைய செட்டில்மென்ட் காலத்தில் யாரிடம் இருந்தது அல்லது ஏதாவது ஒரு காரணத்திற்காக தேவைப்படும். அந்த சமயத்தில் இத்தகைய ஆவணங்களில் இது போன்ற வார்த்தைகள் இருப்பது வழக்கம்.
சமீப பதிவுகளில் செக்குபந்தி, க.ச எண், பைமாஷ், வஜா மற்றும் கவுல் போன்ற வார்த்தைகள் பழைய மூல ஆவணங்களில் மற்றும் பட்டாக்களில் எவ்வகையாக இருந்ததை நமது Patta Chitta வெப்சைட் இல் அப்டேட் செய்துள்ளோம்.
இதையும் பார்க்க: ஈசி வில்லங்க சான்றிதழ்
விஸ்தீரணம் என்றால் பரப்பளவினை குறிக்கும். அதாவது ஒரு பட்டா நிலமோ அல்லது அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள பரப்பளவை குறிக்கும். உதாரணமாக சர்வே எண் 221/3 விஸ்தீரணம் 1.06 ஹெக்டேர் உள்ளது. இதில் 1.06 ஹெக்டேர் க்கு முன்னர் விஸ்தீரணம் என்கிற சொல் பரப்பளவை குறிக்கிறது.
இதையும் பார்க்க: காலி மனை
ஒரு சில நேரத்தில் Tnreginet பதிவுத்துறை இணையத்தளத்தில் நாம் வில்லங்க சான்று தேடும்போது விஸ்தீரணம் மற்றும் உரிமை மாற்றம் செய்யப்பட்ட விஸ்தீரணம் என்று கேட்கும். இவ்விரண்டுமே நிலத்தின் மனையின் பரப்பை குறிக்கும்.
இதையும் பார்க்க: பட்டா எப்படி இருக்கும்