வார்டு உறுப்பினர்கள் பணிகள் மற்றும் கடமைகள் Pdf - பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் செயல்படுவார்கள். ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் பேரூராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு மெம்பெர் கண்டிப்பாக இருப்பார். ஒரு வார்டு என்பது ஒன்று, இரண்டு அல்லது மூன்று தெருக்களில் வாழும் மக்கள் சேர்ந்ததே வார்டு ஆகும். இது கிராம ஊராட்சிக்கு மட்டுமே பொருந்தக்கூடிய ஒன்றாகும். மற்ற பெரிய பெரிய நகரங்களில் வேறுபடலாம்.
வார்டு உறுப்பினர் என்றால் என்ன
ஒரு குறிப்பிட்ட மக்கள்தொகை வாக்காளர்கள் மூலம் இவர் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். இவரும் மற்றவர்களை போல் தான் ஐந்து ஆண்டுகள் பதவி வகிப்பார். இவரை ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள் நியமனம் செய்வார்கள். இதேமாதிரி மற்ற உள்ளாட்சிகளில் வார்டு உறுப்பினர்களுக்கு மேல் உள்ளவர் பதவி பிரமாணம் செய்து வைப்பார்கள். இதேபோல் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் ஏழு முதல் பதினைந்து வார்டு உறுப்பினர்கள் வரையும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
தமிழ்நாடு நகராட்சி எண்ணிக்கை 2022
பணிகள் மற்றும் அதிகாரங்கள்
1. தூய்மை
2. குடிநீர்
3. சாலை
4. பொது விஷயங்கள்.
வார்டு உறுப்பினர் சம்பளம்
மேற்கண்ட பணிகளும் மற்ற ஊராட்சி சார்பில் எந்த வித பணிகளையும் இவர்கள் செய்வார்கள். வளர்ச்சி திட்டங்கள் மற்றும் கிராம சபையன்று எந்த வித கேள்விகளை வேண்டுமானாலும் எழுப்பலாம். இவர்களுக்கு சம்பளம் என்று பார்த்தால் ஏதும் இல்லை. கூட்டங்கள் கூடும் போதும் கொடுக்கப்படும் படி பணம் மட்டுமே. ஊராட்சியாக இருந்தால் 100 அல்லது 200, பேரூராட்சியாக இருந்தால் 500 அல்லது 1000, நகராட்சியாக இருந்தால் 1000 அல்லது 2000, மாநகராட்சியாக இருந்தால் 5000 அல்லது அதற்குமேல் படி பணமும் இவர்களுக்கு வழங்குவார்கள்.
குறிப்பு
மேற்குறிப்பிட்ட சம்பளங்கள் வேறுபடலாம்.